முகப்பு
கல்வி

கலசலிங்கம் பல்கலை: பிளஸ் 2வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு 100 % இலவச கல்வி

தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கும், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் அவர்கள் விரும்பும் பாடத்தில் சேரலாம்.

கல்வி

கலசலிங்கம் பல்கலை: பிளஸ் 2வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு 100 % இலவச கல்வி

தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கும், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் அவர்கள் விரும்பும் பாடத்தில் சேரலாம்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கும், முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவிகளுக்கும் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பில் அவர்கள் விரும்பும் பாடப் பிரிவுடன் 100 சதவீதம் இலவச கல்வி வழங்கப்படும் என வேந்தர் க.ஸ்ரீதரன் கூறினார்.

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழம் சார்பில், தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் அரசு பொதுத் தேர்வை தைரியமாக எதிர்கொண்டு, அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக ஆலோசனை வழங்குவதற்கான ஜெயிப்பது எப்படி? நிகழ்ச்சி தேனியில் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

பல்கலைக்கழக டீன் டாக்டர் சரவணசங்கர் வரவேற்றார். நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி வேந்தர் க.ஸ்ரீதரன் தொடங்கி வைத்துப் பேசினார். பின்னர் பிளஸ் 2 பாடங்களில் அனுபவம்மிக்க ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் குறிப்பிட்ட பாடங்களில் எவ்வாறு அதிகம் மதிப்பெண்கள் பெறலாம் என்பது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தில் மத்திய, மாநில நல்லாசிரியர் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி காட்டிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக பேராசிரியர்கள் உதயகுமார், இளங்கோவன், ரஜினி, கார்த்திக், சிதம்பரம், அருண், ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர். மாணவர் சேர்க்கைப் பிரிவு இயக்குநர் டாக்டர் சு.கண்ணன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →