கலசலிங்கம் பல்கலை.யில் சர்வதேச கருத்தரங்கு
கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் கருவியல் துறை, மத்திய ராணுவ ஆராய்ச்சிக்கழகம், அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி கழகம் இணைந்து கருவியல், தகவல் தொடர்பு, கட்டுப்பாடு குறித்த இரு நாள் தேசிய கருத்தரங்கை நடத்தின.
கல்விகலசலிங்கம் பல்கலை.யில் சர்வதேச கருத்தரங்கு

கருத்தரங்கிற்கு துணை வேந்தர் பி.கன்னியப்பன் தலைமை தாங்கினார். கருத்தரங்கு தலைவர் டாக்டர் கே.வளர்மதி வரவேற்றார். துறைத் தலைவர் எம்.பள்ளிகொண்ட ராஜசேகரன் 145 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிப்பது குறித்து விளக்கினார்.
இலங்கை, மரோட்டுவா பல்கலைக்கழக பேராசிரியர் சிசில் குமாரவாரு கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசுகையில் கூறியதாவது:
தற்போது தினந்தோறும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்றவாறு, அனைத்துத் துறைகளும் தாமாக இயங்கும் முறையில் உள்ள தொழிற்சாலைகள்தான் முன்னேற முடியும். எனவே மாணவர்கள் தானியங்கித் துறை, அதற்கான மென்பொருள் உருவாக்குதலில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
ஆராய்ச்சி கட்டுரை மலரை துணை வேந்தர் பி.கன்னியப்பன் வெளியிட, முதல் பிரதியை ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன் எம்.ஐ.டி. பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஸ்ரீதர் அர்ஜூன் பெற்றுக் கொண்டார். அப்போது ஸ்ரீதர் அர்ஜூன் பேசுகையில் கூறியதாவது: கருவியல் துறையின் பங்கு அனைத்து தொழிற்சாலைகளிலும் முக்கியம் இடம் வகிக்கிறது என்றார்.
திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர் ராதாகிருஷ்ணன், மலேசியா மோனாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் குப்பன் செட்டி ராமநாதன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
டீன் மதன் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் செய்திருந்தார்கள்.