முகப்பு
கல்வி

அண்ணாமலை பல்கலை.யில் 23 எம்பிபிஎஸ் காலியிடங்கள் நிரப்பப்பட்டன

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் (MBBS) படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங் கடந்த ஜூன் 25-ம் தேதி நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:04 AM
பகிர்:

அண்ணாமலைப் பல்கலையில் காலியாக இருந்த 23 எம்பிபிஎஸ் இடங்கள் செவ்வாய்க்கிழமை நிரப்பப்பட்டன.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் (MBBS) படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங் கடந்த ஜூன் 25-ம் தேதி நடைபெற்றது. கலந்தாய்வு மாணவ, மாணவியர்கள் பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் படியும் மற்றும் தமிழகஅரசு இடஒதுக்கீடு விதிப்படியும் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் அனைத்து இடங்களுக்கும் (150 இடங்கள்) மாணவ, மாணவியர்கலுக்கு அனுமதி சேர்க்கை ஆணை பெற்றனர்.

மருத்துவக் கல்லூரியில் சேர்க்கைக்கான இறுதிநாளுக்கும் பின்னர் ஆணை பெற்றவர்கள் 23 பேர் சேர்க்கை செய்யப்படாததால், 23 காலியிடங்கள் ஏற்பட்டது. மேற்கண்ட காலியிடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலிலிருந்து தகுதி மற்றும் தமிழகஅரசு இடஒதுக்கீடு விதிப்படி அடுத்த 23 மாணவர்கள் மட்டும் செவ்வாய்க்கிழமை வருமாறு அழைக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்புகள் மாணவ, மாணவியர்களுக்கு விரைவு தபால் மற்றும் குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டது.

அழைக்கப்பட்ட 23 மாணவ, மாணவியர்கள் தேர்வுக்குழு (Selection Committee) முன்பு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, எம்பிபிஎஸ் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றனர். அனுமதி சேர்க்ககை ஆணையினை பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மை செயலருமான ஷிவ்தாஸ்மீனா வழங்கினார். இதன் மூலம் எம்பிபிஎஸ் படிப்பிற்கான அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுள்ளது என்றும், இதேபோன்று பல் மருத்துவப் படிப்பிற்கான (B.D.S) காலியிடங்களை பூர்த்தி செய்ய காத்திருப்போர் பட்டியலிருந்து, தகுதி மற்றும் தமிழகஅரசு இடஒதுக்கீடு விதிப்படி மாணவர்கள் அழைக்கப்படுவார் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.