கலசலிங்கம் பல்கலை. சார்பில் மதுரையில் இலவச கல்வி வழிகாட்டி ஆலோசனை மையம்
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் மதுரை பகுதியில் உள்ள பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர் கல்விக்கு வழி காட்டுவதற்காக, மதுரையில் இலவச கல்வி வழிகாட்டி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக வேந்தர் க.ஸ்ரீதரன் (படம்) தெரிவித்துள்ளார்.
கல்விகலசலிங்கம் பல்கலை. சார்பில் மதுரையில் இலவச கல்வி வழிகாட்டி ஆலோசனை மையம்
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் மதுரை பகுதியில் உள்ள பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர் கல்விக்கு வழி காட்டுவதற்காக, மதுரையில் இலவச கல்வி வழிகாட்டி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக வேந்தர் க.ஸ்ரீதரன் (படம்) தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் மதுரை பகுதியில் உள்ள பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர் கல்விக்கு வழி காட்டுவதற்காக, மதுரையில் இலவச கல்வி வழிகாட்டி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக வேந்தர் க.ஸ்ரீதரன் (படம்) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை தலைமை அஞ்சலகம் அருகில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் இந்த இலவச கல்வி வழிகாட்டி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் சனி மற்றும் ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
இதில் பேராசிரியர்கள் டாக்டர் அலாவுதீன், டாக்டர் ராமலிங்கம் ஆகியோர் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இன்றுள்ள தொழில்நுட்பத் துறையில் எந்த துறை எடுத்துப் படிக்கலாம் மற்றும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்குகிறார்கள். பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை டீன் டாக்டர் வெ.வாசுதேவன் செய்துள்ளதாக வேந்தர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு துணைப் பதிவாளர் பேராசிரியர் பி.ஜி.குருசாமிபாண்டியனை 94437-28907 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.