ஸ்ரீவில்லிபுத்தூர்: ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சுதந்திரதின விழா
ஸ்ரீவில்லிபுத்தூர், நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திரதின விழா உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.
கல்விஸ்ரீவில்லிபுத்தூர்: ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சுதந்திரதின விழா
ஸ்ரீவில்லிபுத்தூர், நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திரதின விழா உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர், நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திரதின விழா உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா வரவேற்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா கோல்டு சங்கத்தின் பட்டயத் தலைவர் என்.எஸ்.வேலாயுதம், தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, சுதந்திரதின உரையாற்றினார்.
மாணவ மாணவியரின் வண்ணிமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி கிராம கல்விக் குழுத் தலைவி அ.சீத்தாலட்சுமி, ஆசிரியர்கள் பா.பாத்திமா ஞானம், செ.சண்முகநாதன், வே.ராஜேஸ்வரி, ச.பொன்மலர், கிராம மக்கள் மற்றும் பெற்றோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.