கல்வி

தமிழ்ப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

DIN

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி தேர்வுகள் பிரிவில் மூன்றாம் கட்டத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி தேர்வுகள் கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) சி. சுந்தரேசன் தெரிவித்திருப்பது:
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் தேர்வுகள் பிரிவு மூலம் துணைத் தேர்வுகள் 2016, டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில், மூன்றாம் கட்டமாக முதுநிலை வணிக மேலாண்மை 2,3,4-ம் பருவங்கள், பட்டயத்தில் இசை, இசை ஆசிரியர் பயிற்சி, கருவி இசை, பேச்சுக் கலை ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இந்த முடிவுகளை  www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT