கல்வி

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

DIN

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு விடைத்தாள் நகலை மாணவர்கள் சனிக்கிழமை (ஆக.5) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூன் -ஜூலை மாதங்களில் நடந்த பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பம் செய்தவர்கள் சனிக்கிழமை (ஆக.5) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முற்பகல் 1 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் தேர்வெழுதியவர்களின் பதிவெண், பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாளின் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறு கூட்டலுக்கு ஆக.7-இல் விண்ணப்பிக்கலாம்: விடைத்தாளின் நகலைப் பதிவிறக்கம் செய்த பிறகு மறு கூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து வரும் 7 -ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 9 -ஆம் தேதி (புதன்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறு கூட்டல், மறு மதிப்பீட்டிற்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT