கல்வி

பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு: 6,998 மாணவர்களுக்கு சேர்க்கை கடிதம்

DIN

பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வில் இரண்டு நாள்களில் மொத்தம் 6,998 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 2,898 பேர் அழைக்கப்பட்டனர்.
இதில் 2,329 பேர் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்தனர். 558 பேர் கலந்தாய்வுக்கு வருவதைத் தவிர்த்துவிட்டனர். கலந்தாயவில் பங்கேற்ற 11 பேர் இடங்களைத் தேர்வு செய்யவில்லை.
இரண்டாம் நாளான திங்கள்கிழமை கலந்தாய்வில் பங்கேற்க 5,942 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 4,669 பேர் இடங்களைத் தேர்வு செய்தனர். 1,204 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. 69 பேர் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
மின்னணுவியல், கணினி அறிவியல் பிரிவில்...இதுவரை சேர்க்கை பெற்றவர்களில் 1,470 பேர் பி.இ. மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் பிரிவையும், 1,077 பேர் பி.இ. கணினி அறிவியல் பிரிவையும், 1,014 பேர் பி.இ. இயந்திரவியல் பிரிவையும், மற்றவர்கள் பிற பிரிவுகளையும் தேர்வு செய்துள்ளனர்.
தமிழ் வழி பொறியியல் படிப்புகளைப் பொருத்தவரை பி.இ. கட்டடவியல் பிரிவில் 11 பேரும், பி.இ. இயந்திரவியல் பிரிவில் 15 பேரும் சேர்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT