கல்வி

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு...

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை தனித்தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

DIN

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை தனித்தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: நிகழாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தத்கல் உள்பட) வெள்ளிக்கிழமை (ஜூன் 16) முதல்  www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெற்றுத் தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வை மீண்டும் செய்வதுடன் எழுத்துத் தேர்வுக்கும் வருகை புரிய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு வருகை தர வேண்டும்.
மொழிப்பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம்.
உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா் 58 போ் கைது

சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம் நகை திருடிய செவிலியா் கைது

SCROLL FOR NEXT