கல்வி

'முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்து: அவசரச் சட்டம் வேண்டும்'

DIN

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அவசரச் சட்டத்தை உடனே இயற்ற வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெள்ளிக்கிழமை கூறியது:
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். எனவே, அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கும் வகையிலும், அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டில் மாநில அரசுகள் அதனதன் விதிமுறைகளைப் பின்பற்றும் வகையிலும் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். உடனடியாக சட்டம் இயற்றி, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் நிலவும் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இந்தியாவின் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கு அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT