கல்வி

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: மாணவர்களை குழப்பிய ஒரு மதிப்பெண் வினாக்கள்: காப்பியடித்ததாக 31 பேர் பிடிபட்டனர்

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் 5 வினாக்கள் குழப்பமான முறையில் கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதனால் இந்தப் பாடத்தில் கடந்த ஆண்டைப் போலவே

DIN

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் 5 வினாக்கள் குழப்பமான முறையில் கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதனால் இந்தப் பாடத்தில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 200-க்கு 200 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான இயற்பியல் தேர்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 21)
நடைபெற்றது. பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளை தேர்வு செய்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணை தீர்மானிக்கும் பாடங்களில் இயற்பியல் பாடமும் ஒன்றாகும்.
இந்த நிலையில் நிகழாண்டு தேர்வு குறித்து சென்னை கே.கே.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வெழுதிய டி.ஆர். சில்வியா, பி.ராஜேஸ்வரி உள்ளிட்ட மாணவிகள் கூறியது:
கடந்த சில ஆண்டுகளாக இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக கேட்கப்படுகின்றன. இதை கருத்தில்கொண்டு அதில் கூடுதல் கவனம் செலுத்தினோம்.
இருப்பினும், நிகழாண்டு வினாத்தாளில் பகுதி 1 -இல் (ஒரு மதிப்பெண்) ஐந்து கேள்விகள் சற்று குழப்பமான வகையில் கேட்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு யோசித்து பதிலளிக்க அதிகநேரம் செலவிட வேண்டியிருந்தது.
ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது தேர்வு எளிதாக இருந்தது. அதே நேரத்தில் 190 -க்கும் மேல் மதிப்பெண் பெறுவதே சற்று சிரமம்தான் என்றனர்.
பொருள் மாறுபடாமல்... இதுகுறித்து வேலூர் மாவட்டம் கொனவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியர் கே.சங்கர் கூறியது:
மாணவர்கள் குறிப்பிட்ட 5 கேள்விகளும் நேரடியாகக் கேட்கப்படாமல், மறைமுகமாகக் கேட்கப்பட்டிருந்தன. அதனால் நன்கு படிக்கும் மாணவர்களுக்குக்கூட அவை சற்று கடினமாக இருந்திருக்கக் கூடும். அதனால் இயற்பியலில் 200 -க்கு 200 மதிப்பெண் பெறுவோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
இருப்பினும், 10 மதிப்பெண் வினாக்களில் கேட்கப்பட்டிருந்த எளிதான கேள்விகளால், கடந்த ஆண்டுகளை காட்டிலும் இயற்பியலில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது என்றார்.
திருச்சியில் 9 பேர்: இதனிடையே, பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் பெரம்பலூர், திருச்சி, கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் உள்பட காப்பியடித்ததாக 31 மாணவர்கள் பிடிபட்டனர். அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் 9 மாணவர்கள் பிடிபட்டனர் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழர்களின் அடையாளம்!

கீரைப்பொடி

4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

2-ஆவது மனைவி தாக்கப்பட்டு கொலை: காா் ஓட்டுநா் கைது

செங்கை புத்தக திருவிழா: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

SCROLL FOR NEXT