கல்வி

'நீட்' தேர்வு மையங்களை மாற்ற மார்ச் 31 வரை அவகாசம் நீடிப்பு

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய நுழைவுத் தகுதித் தேர்வு (நீட்) மையங்களை மாற்றிக் கொள்ள, வரும் மார்ச் 31-ஆம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய நுழைவுத் தகுதித் தேர்வு (நீட்) மையங்களை மாற்றிக் கொள்ள, வரும் மார்ச் 31-ஆம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மேல்நிலைப் பள்ளித் தேர்வு வாரியம் (சிபிஎஸ்சி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தங்களது 'நீட்' தேர்வு மையங்களை ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்கு மாற்றிக் கொள்ள விரும்பும் மாணவர்கள், வரும் மார்ச் மாதம் 24-ஆம் தேதி முதல், 27-ஆம் தேதி வரை அவ்வாறு மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, அந்தக் காலக்கெடு மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், தற்போதைய 'நீட்' தேர்வு மையங்கள் மட்டுமன்றி, மகாராஷ்டிரத்தின் நாந்தேட் நகரிலும் கூடுதலாக ஒரு தேர்வு மையம் திறக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸாவில் தாக்குதல்களைத் தொடரும் இஸ்ரேல்.. பாலஸ்தீன மக்கள் 12 பேர் பலி!

தமிழக அரசு விருது கிடைக்காத விரக்தியில் விடியோ வெளியிட்ட சிறுவன் அஸ்வந்த்!

நள்ளிரவு 2 மணிக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்தால்.. மலிவாக இருக்கும் என்பது உண்மையா?

மகாராஷ்டிரத்தின் முதல் பெண் துணை முதல்வராகும் சுநேத்ரா பவாா்..! இன்று மாலை பதவியேற்பு!

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம்!

SCROLL FOR NEXT