கல்வி

நெட் தேர்வு: 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

DIN

கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான (நெட்) தகுதித் தேர்வை நாடு முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர்.
கல்லூரிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும் மத்திய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது. ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தேர்வில் நாடு முழுவதிலும் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து சி.பி.எஸ்.இ. வெளியிட்ட செய்தி:
நெட் தேர்வில் பங்கேற்க 9.30 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். நாடு முழுவதும் 91 நகரங்களில் 1,700 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. விண்ணப்பித்தவர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வுகளுக்கு கூடுதலாக 25 நிமிடங்களும், தாள்-3 தேர்வுக்கு கூடுதலாக 50 நிமிடங்களும் கால அவகாசம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT