கல்வி

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு: நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

DIN

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை (செப்.8) முதல் வழங்கப்படவுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி புதன்கிழமை (செப்.6) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைப் பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு ஜூலை 28-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வர்கள் தாங்களே ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. நிரந்தர பதிவெண் (PRN) வழங்கப்பட்ட தேர்வர்கள் அவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை ஜூன், ஜூலை நடைபெற்ற சிறப்பு துணை பொதுத் தேர்வில் தேர்வெழுதி அனைத்துப் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருப்பின் ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதர தேர்வர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் தேர்வெழுதிய பாடங்களுக்காந அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (மறு கூட்டல் உள்பட) வழங்கப்படும். இந்தச் சான்றிதழை வெள்ளிக்கிழமை (செப்.8) முதல் தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம். என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT