கல்வி

அண்ணாமலைப் பல்கலை. எம்.பி.ஏ. படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தினமணி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. செயலாக்கத் தொழில் நிர்வாக மேலாண்மை (பகுதி நேரம்) M.B.A. Executive Management (Part-time) படிப்புக்கு இணையதளம் (ஆன்லைன்) மூலம் விண்ணப்பிக்கலாம்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், என்.எல்.சி. இந்தியா நிறுவனமும் இணைந்து எம்.பி.ஏ. செயலாக்கத் தொழில் நிர்வாக மேலாண்மைப் படிப்பை வழங்குகின்றன. இதில் சேர விரும்புவோர் www.annamalaiuniversity.ac.in/adm/nlcmba_course.php என்ற இணையதளத்தில் விவரங்களையும், விளக்கக் கையேடும் பெற்று, www.annamalaiuniversity.ac.in/adm/appl_nic.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 500. மற்றவர்களுக்கு ரூ. 1,000. 
கல்வித் தகுதி : 10+2+3 முறையில் இளநிலைப் பட்ட படிப்பு மற்றும் இரண்டு வருட அனுபவம். நிறைவு செய்யப்பட்ட இணையதள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டபடி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலைப் பட்டம், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை இணைத்து 30.7.2018 }க்குள் "பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் } 608 002' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
மேலும், என்.எல்.சி. இந்தியா நிறுவன வளாகத்தில் உள்ள "பிளாக் எண்: டி.142, அண்ணா சாலை, நெய்வேலி' அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளர் செல்வராசுவிடம் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை அலுவலக நேரத்தில் நேரிடையாகவும் விளக்கம் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94429 95980, 90801 08099 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும், aselvarasu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT