கல்வி

பத்தாம் வகுப்பு துணை பொதுத் தேர்வு: 25, 26 -இல் அறிவியல் செய்முறை

DIN

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், பங்கேற்காத தேர்வர்கள் ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு துணைப் பொதுத்தேர்வில் பங்கேற்கலாம் எனஅரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 
கடந்த மார்ச் -ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், அறிவியல் பாட பயிற்சி வகுப்புக்கு 80 சதவீதம் வருகை புரிந்து, ஆனால் செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளத் தவறிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் ஆகியோர் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்புப் துணைப் பொதுத் தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இதுகுறித்த முழு விவரங்களையும் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் தேர்வர்களின் முகவரிக்கு இது குறித்து அறிவிப்பு ஏதும் அனுப்பப்படமாட்டாது என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT