கல்வி

கால்நடை மருத்துவப் படிப்பு: செப். 22-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

DIN

கால்நடை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: 
இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச்.) படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு செப்டம்பர் 22 -ஆம் தேதி இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதேபோன்று பி.டெக். (இளநிலை கால்நடை தொழில்நுட்ப படிப்பு) படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு செப்டம்பர் 23 -ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. 
சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி அண்ணா கலையரங்கில் நடைபெறும் இந்த கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியுள்ள மாணவர்களின் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
அக். 3-இல் வகுப்புகள் தொடக்கம்: முதலாமாண்டு இளநிலை படிப்புகளுக்கான (பி.வி.எஸ்சி. -ஏ.ஹெச்., பி.டெக்) வகுப்புகள் அக்டோபர் 3 -ஆம் தேதி தொடங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT