முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு (கியூட்) விண்ணப்பப் பதிவு ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 1ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு இன்னும் ஒரு சில நாள்களே கால அவகாசம் உள்ளது.
2025ஆம் ஆண்டு மார்ச் 13 முதல் 31ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் பூர்த்தி செய்து அனுப்பப்படும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிநாட்டு தேர்வு மையங்கள் உள்பட 312 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.
மத்திய பல்கலைக்கழகங்களில் 2025 ஆம் ஆண்டிற்கான முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத் தேர்வை தேசிய தேர்வு முகமை அறிவித்து, விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய இன்னும் ஒரு சில நாள்களே கால அவகாசம் உள்ளது.
அதேபோல் விண்ணப்பித்த மாணவர்கள் என்.டி.ஏ. இணையதளத்திலிருந்து அட்மிட் கார்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
இந்த தேர்வுக்கு வயது வரம்பு எதுவும் இல்லை. கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப மாறுபடும் என்றும், பொதுப் பிரிவினர் ஒரு தாள் எழுத ரூ.800ம், இரண்டு தாள்கள் எழுத ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.