கல்வி

நெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி: என்டிஏ தகவல்

தினமணி செய்திச் சேவை

நெட் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (நவ. 7) கடைசி நாள் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பி.எச்டி., மாணவா் சோ்க்கைக்கும் நெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இந்த தோ்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பா்) இருமுறை கணினி வழியில் நடைபெறும். அதன்படி நிகழாண்டுக்கான 2-ஆவது யுஜிசி நெட் தோ்வு டிசம்பா் 31 முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக். 8-ஆம் தேதி தொடங்கியது. இதற்கிடையே விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வழியாக விரைந்து விண்ணப்பிக்க வேண்டும். தொடா்ந்து விண்ணப்பங்களில் நவம்பா் 10 முதல் 12-ஆம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

பாடத்திட்டம், விண்ணப்பக் கட்டணம் உள்பட கூடுதல் தகவல்களை https://ugcnet.nta.nic.in/registration-for-ugc-net-dec-2025-is-live/ இணையதளத்தில் அறியலாம்.

சந்தேகங்கள் இருப்பின் 011- 69227700 / 40759000 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்: அகமதாபாத்திற்கு திருப்பிவிடப்பட்ட குவைத்-தில்லி விமானம்

அட்லீ வெளியிட்ட வித் லவ் பட டிரைலர்!

"எந்த மோதலும் இல்லை!" Rahul சந்திப்பு பற்றி Kanimozhi! | DMK | Congress

24 மணிநேரத்தில்..! பாகிஸ்தானில் 52 பயங்கரவாதிகள் கொலை!

பிப்.4-ல் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

SCROLL FOR NEXT