சிபிஎஸ்இ மாணவர்கள் pti
செய்திகள் / கட்டுரைகள்

தனித்தேர்வர்கள் கவனத்துக்கு! சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புக்கான தேர்வு நுழைவுச் சீட்டு!

தனித்தேர்வர்களுக்கு, 10, 12ஆம் வகுப்புக்கான தேர்வு நுழைவுச் சீட்டை வெளியிட்டது சிபிஎஸ்இ.

இணையதளச் செய்திப் பிரிவு

10, 12-ஆம் வகுப்புகளுக்கான 2026-ஆம் ஆண்டு பொதுத் தோ்வு தொடங்கவிருக்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களக்கான நுழைவுச் சீட்டினை வெளியிட்டுள்ளது.

சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தனித்தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், தேர்வுக் கூடத்துக்குள் நுழைய இது மிகவும் அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுச் சீட்டானது, தனித்தேர்வர்கள் எழுதும் பாடம், அதில் பெற வேண்டிய மதிப்பெண்கள் என அனைத்தும் இடம்பெற்றதாக இருக்கும்.

இந்த தனித்தேர்வர்கள் என்பவர்கள், பள்ளியில் சேர்க்கை பெறாமல், தேர்வெழுத மட்டும் விண்ணப்பித்திருப்பவர்கள் ஆவர். அதாவது, கடந்த ஆண்டு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்து, அனைத்துத் தேர்வுகளையும் மீண்டும் எழுதி நல்ல மதிப்பெண் பெற நினைப்பவர்கள், தேர்ச்சி பெற்று ஆனால் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், மீண்டும் தேர்வெழுதி நல்ல மதிப்பெண் பெற நினைப்பவர்கள் போன்றவர்கள் தனித்தேர்வர்களாகக் கருதப்படுகிறார்கள்.

நுழைவுச் சீட்டில் இருக்கும் விவரங்களை மாணவர்கள் சரிபார்த்துக் கொள்ளவும், பிழைகள் இருந்தால் உடனடியாக பதிவு செய்யவும் மண்டல அலுவலகங்களில் இது குறித்து தெரிவித்து பிழைகளை சரி செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10, 12-ஆம் வகுப்புகளுக்கான 2026-ஆம் ஆண்டு பொதுத் தோ்வு அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தனித் தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டினை வெளியிட்டிருக்கும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் நுழைவுச் சீட்டினை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான நுழைவுச் சீட்டு வெளியானதும், மாணவர்கள் www.cbse.nic.in அல்லது www.cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களிலிருந்து நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது அந்தந்த பள்ளிகளில் நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தும் வழங்கப்படும்.

வழக்கமாக இரு வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகளும் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கி நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுத்தமான குடிநீர் இல்லாத இந்தூர் பொலிவுறு நகரமா? மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி

MGR-ரின் 109 ஆவது பிறந்தநாள்! சிலைக்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை!

சாரா அர்ஜுனின் புதிய பட டிரைலர்!

திருச்சியில் களைகட்டும் காணும் பொங்கல்! முக்கொம்பு சுற்றுலா தளத்தில் கொண்டாட்டம்!

எம்.ஜி.ஆரின் 109 ஆவது பிறந்தநாள்! எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி!

SCROLL FOR NEXT