வினா-விடை வங்கி

வினா - விடை வங்கி... டெல்லி சுல்தான்கள்! - 2

டெல்லி சுல்தான்கள் வினா - விடை வங்கி...

இணையதளச் செய்திப் பிரிவு

1. ரஸ்ஸியா யாருடைய மகள்?

(a) குத்புதீன் ஐபக்

(b) இல்துமிஷ்

(c) பால்பன்

(d) ஷாஜகான்

2. ஜலாலுதீன் யாகுத் யாருடைய உதவியாளர்?

(a) இல்துமிஷ்

(b) ரஸ்ஸியா

(c) குத்புதீன் ஐபக்

(d) பாபர்

3. ஜலாலுதீன் எந்த நாட்டு அடிமை?

(a) மங்கோலிய அடிமை

(b) உஸ்பெகிஸ்தான் அடிமை

(c) எத்தியோப்பிய அடிமை

(d) இவற்றில் எதுவுமில்லை

4. ரஸ்ஸியா கொலை செய்யப்பட்ட ஆண்டு?

(a) 1240

(b) 1238

(c) 1242

(d) 1245

5. நாற்பதின்மர் என்றறியப்பட்ட துருக்கிய குழுவை ஒழித்தவர் யார்?

(a) ரஸ்ஸியா

(b) இல்துமிஷ்

(c) கியாசுதீன் பால்பன்

(d) இவர்களில் யாருமில்லை

6. தனது ஆட்சிக்கு எதிராக சதி செய்பவரை கண்டறிய ஒற்றர் துறையை உருவாக்கியவர் யார்?

(a) குத்புதீன் ஐபக்

(b) ரஸ்ஸியா

(c) இல்துமிஷ்

(d) கியாசுதீன் பால்பன்

7. பால்பன் ஆதரித்த பாரசீக கவிஞர் யார்?

(a) கபீர்

(b) அமிர்குஸ்ரு

(c) கைகுபாத்

(d) இவர்களில் யாருமில்லை

8. கீழ்க்கண்டவர்களில் பால்பனிடம் படைத்தளபதியாக பணியாற்றியவர் யார்?

(a) மாலிக் ஜலாலுதீன் கில்ஜி

(b) அலாவுதீன் கில்ஜி

(c) கைகுபாத்

(d) இவர்களில் யாருமில்லை

9. கில்ஜி வம்சத்தின் ஆட்சியை தொடங்கியவர் யார்?

(a) அலாவுதீன் கில்ஜி

(b) இல்துமிஷ்

(c) மாலிக் ஜலாலுதீன் கில்ஜி

(d) ரஸ்ஸியா

10. கில்ஜி வம்சத்தின் ஆட்சிக் காலம்?

(a) 1290 - 1310

(b) 1295 - 1320

(c) 1300- 1320

(d) 1290 – 1320

11. மாலிக் கபூர் யாருடைய தலைமைத் தளபதி?

(a) ஜலாலுதீன் கில்ஜி

(b) அலாவுதீன் கில்ஜி

(c) கைகுபாத்

(d) செங்கிஸ்கான்

12. மாலிக் கபூரை மதுரை வரை படையெடுக்க பணித்தவர் யார்?

(a) ஜலாலுதீன் கில்ஜி

(b) அலாவுதீன் கில்ஜி

(c) பால்பன்

(d) பக்தியார் கில்ஜி

13. மாலிக் கபூர் தெற்கு நோக்கி படையெடுக்க அனுப்பப்பட்ட ஆண்டு?

(a) 1308

(b) 1309

(c) 1310

(d) 1312

14. பின்வருபவர்களில் அலாவுதீனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள் யார்?

(a) யாதவர்கள்

(b) ஹொய்சாளர்கள்

(c) பாண்டியர்கள்

(d) மேற்கூறிய அனைவரும்

15. சித்தூர் கோட்டை சூறையாடப்பட்ட ஆண்டு?

(a) 1303

(b) 1304

(c) 1305

(d) 1306

16. யாருடைய படை சித்தூர் கோட்டையை சூறையாடியது?

(a) ஜலாலுதீன் கில்ஜி

(b) பக்தியார் கில்ஜி

(c) அலாவுதீன் கில்ஜி

(d) கியாசுதின் துக்ளக்

17. ஜவ்ஹர் சடங்கு என்பது...

(a) ஆடவர் போர்க்களத்தில் மாள்வர், பெண்கள் தீயில் தங்களை மாய்த்துக் கொள்வர்

(b) ஆடவர், பெண்கள் இருவரும் போர்க்களத்தில் மாள்வர்

(c) ஆடவர்கள், பெண்கள் இருவரும் தீயில் மாள்வர்

(d) இவற்றில் எதுவுமில்லை

18. படைப் பிரிவுகளுக்காக கட்டாய உணவு தானிய கொள்முதல் முறையை அறிமுகம் செய்தவர்?

(a) கியாசுதீன் பால்பன்

(b) முகமது பின் துக்ளக்

(c) அலாவுதீன் கில்ஜி

(d) ஜலாலுதீன் கில்ஜி

19. அலாவுதீன் கில்ஜி இறந்த ஆண்டு?

(a) 1316

(b) 1315

(c) 1312

(d) 1314

20. துக்ளக் வம்சத்துக்கு அடிக்கல் நாட்டியவர் யார்?

(a) முகமது பின் துக்ளக்

(b) கியாசுதீன் துக்ளக்

(c) பிரோஷ் ஷா துக்ளக்

(d) இவர்களில் யாருமில்லை

21. துக்ளக் வம்சத்தின் ஆட்சிக் காலம்?

(a) 1320 - 1412

(b) 1320 - 1400

(c) 1320 – 1414

(d) 1322 - 1410

22. டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் எனும் நகரை உருவாக்கியவர்?

(a) கியாசுதீன் துக்ளக்

(b) முகமது பின் துக்ளக்

(c) பிரோஷ் ஷா துக்ளக்

(d) மாலிக் கபூர்

23. வாரங்கல் அரசன் பிராதப ருத்ரனை வெற்றி கொண்டவர்?

(a) கியாசுதீன் துக்ளக்

(b) ஜூனாகன்

(c) பிரோஷ் ஷா துக்ளக்

(d) இவர்களில் யாருமில்லை

24. முகமது பின் துக்ளக் அரியணை ஏறிய ஆண்டு?

(a) 1324

(b) 1326

(c) 1325

(d) 1330

25. தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றியவர் யார்?

(a) பிரோஷ் ஷா துக்ளக்

(b) முகமது பின் துக்ளக்

(c) கியாசுதீன் துக்ளக்

(d) இவர்களில் யாருமில்லை

விடைகள்

1. (b) இல்துமிஷ்

2. (b) ரஸ்ஸியா

3. (c) எத்தியோப்பிய அடிமை

4. (a) 1240

5. (c) கியாசுதீன் பால்பன்

6. (d) கியாசுதீன் பால்பன்

7. (b) அமிர்குஸ்ரு

8. (a) மாலிக் ஜலாலுதீன் கில்ஜி

9. (c) மாலிக் ஜலாலுதீன் கில்ஜி

10. (d) 1290 – 1320

11. (b) அலாவுதீன் கில்ஜி

12. (b) அலாவுதீன் கில்ஜி

13. (c) 1310

14. (d) மேற்கூறிய அனைவரும்

15. (a) 1303

16. (c) அலாவுதீன் கில்ஜி

17. (a) ஆடவர் போர்க்களத்தில் மாள்வர், பெண்கள் தீயில் தங்களை மாய்த்துக் கொள்வர்

18. (c) அலாவுதீன் கில்ஜி

19. (a) 1316

20. (b) கியாசுதீன் துக்ளக்

21. (c) 1320 – 1414

22. (a) கியாசுதீன் துக்ளக்

23. (b) ஜூனாகன்

24. (c) 1325

25. (b) முகமது பின் துக்ளக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயி கொலை; ஒருவா் கைது

எம்.துரைசாமிபுரம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

அறுவை சிகிச்சையின்றி மூதாட்டிக்கு இதய வால்வு மாற்றம்

புதுச்சேரியில் திமுக உறுப்பினா் சோ்க்கைப் பணி: ஜெகத்ரட்சகன் எம்.பி. தொடங்கி வைத்தாா்

உலகின் 2% தலைசிறந்த ஆராய்ச்சியாளா்கள் பட்டியல்: 3 குவாஹாட்டி பல்கலை. பேராசிரியா்களுக்கு இடம்

SCROLL FOR NEXT