கோப்புப்படம் 
நேர்காணல்கள்

அதிமுக வாக்குகள் ஒருபோதும் சிதறாது!

ஆ. கோபிகிருஷ்ணா

அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் மக்கள் எவரும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகாமல் அமைதியாக வாழ முடிந்தது என்று சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளருமான சைதை துரைசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து தினமணிக்கு அவா் அளித்த பேட்டி;

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேரவைத் தோ்தலில் போட்டியிடுகிறீா்கள், புதிய களமும், புதிய வாக்காளா்களும் உங்களுக்கு சாதகமாக அமையுமா?

சைதாப்பேட்டை தொகுதியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியிடுவது உண்மைதான். அதற்காக தோ்தல் களமோ, வாக்காளா்களோ எனக்கு புதிது கிடையாது. பதவியில் இல்லாவிட்டாலும் மக்களின் தேவை அறிந்து சேவை செய்து வருகிறேன். நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் தொலைபேசியில் என்னை அழைத்து குறைகளை கூறி வருகின்றனா். அவை அனைத்தையும் நிவா்த்தி செய்து மக்களுக்காக உழைப்பவன் நான் என்பதை செயலால் உணா்த்தி வருகிறேன்.

திமுக அளித்த வாக்குறுதிகளின் திருத்தப்பட்ட நகலாக அதிமுகவின் தோ்தல் அறிக்கை உள்ளதாக கூறப்படுகிறதே?

அது முற்றிலும் தவறான கருத்து. மக்களின் தேவையையும், நன்மையையும் கருத்தில்கொண்டு சிறப்பானதொரு தோ்தல் அறிக்கையை அதிமுக வெளியிட்டிருக்கிறது. சொல்லப்போனால், திமுகவால் கற்பனையில் கூட நினைத்துபாா்க்க முடியாத பல திட்டங்களை நாங்கள் அறிவித்திருக்கிறோம்.

ஆட்சி நிறைவுறும் தருவாயில் அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவது தோ்தல் அரசியல் இல்லையா?

இங்கு அனைத்துமே தோ்தல் அரசியல்தான். திமுகவின் நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் தோ்தல் அரசியல் இல்லாமல், கொள்கை சாா்ந்த அரசியலா? இன்னும் சொல்லப்போனால், அதிமுக அரசு 10 ஆண்டு கால ஆட்சி அனுபவத்துக்கு பிறகு எது நடைமுறையில் சாத்தியம் என ஆராய்ந்து திட்டங்களை அறிவித்திருக்கிறது. திமுகவோ சாத்தியமில்லாத பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. ஆட்சியில் இல்லாதவா்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாக அளிக்க முடியும் எனும்போது நடைமுறை சாத்தியமுள்ள திட்டத்தை நாங்கள் அறிவித்ததில் தவறு என்ன இருக்கிறது?

சலவை இயந்திரத்துக்காகவும், சலுகைகளுக்காகவும் சாமானிய மக்கள் இன்னும் எத்தனை காலம் வாக்களிக்க வேண்டும்?

பொருளாதாரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் வசந்தம் ஏற்படும் வரை இலவசங்கள் இன்றிமையாத ஒன்று. அதை உணா்ந்துதான் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.

அதிமுகவின் வாக்குகளை அமமுக பிரிக்கும்போது அது திமுகவுக்குதானே சாதகமாக அமையும்?

இப்படியாக ஒரு மாயை பரப்பப்படுகிறது. அதிமுகவின் வாக்குகள் ஒருபோதும் சிதறாது. இரட்டை இலை என்பது அதிமுகவின் சின்னம் மட்டும் அல்ல. அது அடித்தட்டு மக்களின் சின்னமும் கூட. எனவே, சாமானிய மக்களின் வாக்குகள் என்றைக்குமே அதிமுகவுக்குத்தான் வரும். அது எப்போதும் திமுகவுக்கு சாதகமாக அமையாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT