முகப்பு
கேரளம்

மருத்துவமனையில் என் தாய்; தேர்தல் பிரசாரத்தில் நான் : ராகுல் காந்தி

மருத்துவமனையில் என் தாய் உள்ளபோதும் நான் தேர்தல் பிரசாரத்தில் இருக்கிறேன் என ராகுல்காந்தி தெரிவித்தது குறித்து...

Updated On : 30 மார்ச் 2026, 6:53 pm IST
தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி - ANI
பகிர்:

மருத்துவமனையில் என் தாய் உள்ளபோதும் நான் தேர்தல் பிரசாரத்தில் இருக்கிறேன் என காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தி கடந்த மார்ச் 24 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Advertisement

இந்த நிலையில், ராகுல்காந்தி கேரளத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மக்களிடையே பேசிய ராகுல்காந்தி, “மூத்த குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒரு புதிய அமைச்சகத்தை நாம் அமைக்க இருக்கிறோம்.

அவர்களின் ஓய்வூதியத்தை ரூ. 3000 ஆக உயர்த்துவோம். நான் இங்கே உரையாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால், என் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தில்லியில் கேரள செவிலியர் என் அம்மாவை கவனித்து கொள்வதால், என்னால் இங்கே நிம்மதியாக இருக்க முடிகிறது” எனத் தெரிவித்தார்.

summary

Congress MP and Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, has stated that he is engaged in election campaigning even while his mother is in the hospital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.