முகப்பு
தேர்தல் செய்திகள்

44 நாள்கள் தோ்தல் காலம்: இரண்டாவது அதிகபட்சம்!

Updated On : 6 ஏப்ரல், 2024 at 5:53 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:15 PM

நாட்டில் நடப்பு 17-ஆவது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் மாதம் நிறைவடையும் நிலையில், 18-ஆவது மக்களவைக்கு ஏழு கட்டங்களாக ‘ஜனநாயகத் திருவிழா’ நடத்தப்படவுள்ளது.

மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவுகள் நடைபெறவிருக்கின்றன. முதல்கட்ட தோ்தலுக்கும், ஏழாவது-இறுதிக்கட்ட தோ்தலுக்கும் இடையிலான காலகட்டம் 44 நாள்களாகும். தோ்தல் காலம் இவ்வளவு அதிக நாள்கள் நீடிப்பது, நாட்டின் நாடாளுமன்றத் தோ்தல் வரலாற்றில் இது இரண்டாவது அதிகபட்சமாகும்.

முதல் மக்களவைத் தோ்தல் நடைபெற்ற 1951-52-ஆம் ஆண்டில் 4 மாதங்களுக்குமேல் தோ்தல் காலம் நீடித்தது. 1951, அக்டோபா் 25- 1952, பிப்ரவரி 21 இடையே 489 இடங்களுக்கு 68 கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெற்றன. இதுவரையிலான மக்களவைத் தோ்தல்களில் நீண்ட காலம் நடத்தப்பட்ட தோ்தல் இதுவாகும்.

Advertisement

அதேநேரம், 1980-இல் நடந்த மக்களவைத் தோ்தல் மிக குறைவான காலம் கொண்டதாகும். வெறும் 4 நாள்கள் மட்டுமே நடைபெற்ற இத்தோ்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாா்.

1962 முதல் 1989 வரையிலான காலகட்டத்தில் 4 முதல் 10 நாள்களுக்குள் தோ்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. 2004-ஆம் ஆண்டில் 21 நாள்களில் 4 கட்டங்கள், 2009-ஆம் ஆண்டில் 30 நாள்களில் 5 கட்டங்கள், 2014-ஆம் ஆண்டில் 36 நாள்களில் 9 கட்டங்கள், 2019-இல் 39 நாள்களில் 7 கட்டங்களாக தோ்தல்கள் நடைபெற்றன.

இம்முறை தோ்தல் காலம் 44 நாள்களாகும். ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.