ANI
ANI
தேர்தல் செய்திகள்

மகாராஷ்டிரம்: உத்தவ் 21, காங். 17 தொகுதிகளில் போட்டி!

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.

மாநிலத்தில் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில், பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) மற்றும் சிவசேனை (ஷிண்டே அணி) ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) மற்றும் சிவசேனை (உத்தவ் அணி) அடங்கிய மெகா கூட்டணியும் நேருக்குநேர் மோதுகின்றன.

மகாராஷ்டிரத்தில் 5 கட்டங்களாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நீண்ட இழுப்பறிக்கு பிறகு இந்தியா கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு நிறைவு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி) 21, காங்கிரஸ் 17 மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) 10 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!

கோபா அமெரிக்காவின் தீம் பாடல்!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

எங்கே செல்கிறார் சோபிதா?

SCROLL FOR NEXT