தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வரான சுநேத்ரா பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த தலைவரான பிரஃபுல் படேல் அறிவித்துள்ளார்.
மும்பையில் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களாலும் ஒருமனதாக சுநேத்ரா பவார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
மேலும், புதிய தலைமையின்கீழ் ஒற்றுமையுடனும் வலிமையுடனும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும் படேல் கூறினார்.
முன்னதாக, மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜீத் பவார் ஜன. 28 ஆம் தேதி பாராமதியில் நேரிட்ட விமான விபத்தில் பலியானார். இதையடுத்து, அவரது மனைவி சுநேத்ரா பவார் கடந்த ஜனவரி 31-ல் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
Maharashtra Deputy CM Sunetra Pawar elected as the National President of NCP
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.