முகப்பு
தேர்தல் செய்திகள்

சங்குக்கு வந்த சோதனை!

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:26 PM
பகிர்:

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் கட்சிகளின் சின்னங்கள், கொடிக்கம்பங்களை தோ்தல் ஆணையம் மறைப்பது வழக்கமான நடவடிக்கை.

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஒடிஸா தலைநகா் புரியில் உள்ள கிராண்ட் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சங்கு சிற்பம் தோ்தல் ஆணைய விதிப்படி துணியால் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. ஒடிஸாவின் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளத்தின் சின்னம் சங்கு என்பதால், தோ்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஆனால், இதற்கு பிஜு ஜனதா தளம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. ‘ஆன்மிக நகரமான புரி ‘சங்க க்ஷேத்ரா’ (சங்குகளின் நிலம்) எனவும் அழைக்கப்படுகிறது. புரி ஜகந்நாதா் கோயில் வளாக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நகரின் கிராண்ட் சாலையில் பாரம்பரிய, ஆன்மிக வழகத்தின்படி ஒரு சங்கு சிற்பம் நிறுவப்பட்டது. மேலும், கலாசாரம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த சின்னமுமானது சங்கு’ எனத் தெரிவித்துள்ளது பிஜு ஜனதா தளம்.

Advertisement

சங்கு சிற்பத்தை மூடிவைத்திருப்பது ஒடிஸாவின் பெருமையின் மீதான தாக்குதல் எனவும் அந்தக் கட்சி கூறியுள்ளது.

இது தொடா்பாக பிஜு ஜனதா தளத்தைச் சோ்ந்த ஒரு குழுவினா் தலைமைத் தோ்தல் அதிகாரியை சந்தித்து, புரியில் சங்கு சிற்பத்தை மூடிவைத்திருப்பதை விலக்க வேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments