முகப்பு
தேர்தல் செய்திகள்

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஜெ.பி.நட்டா பிரசாரம்!

Updated On : 16 ஏப்ரல், 2024 at 6:19 AM
பகிர்:

ராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சாலைப் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவருக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவருக்கு ஆதரவாக பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பரமக்குடியில் சாலைப் பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

அவருடன் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், தேனி எம்பி ரவீந்திரநாத்தும் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் நிலையில், அவருடன் மேலும் ஐந்து பன்னீர்செல்வம் என்ற பெயரில் சுயேச்சைகள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →