காந்தி நகர்: 2.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமித்ஷா முன்னிலை!
காங்கிரஸ் வேட்பாளர் சோனல் படேலை 2.31 லட்சம் வித்தியாத்தில் முன்னிலையில் உள்ளார் அமித்ஷா.
காந்தி நகர் தொகுதியில் 2.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அமித் ஷா முன்னிலையில் உள்ளார்.
மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது. 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
எல்.கே.அத்வானி, வாஜ்பாய் வெற்றிபெற்ற தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கியுள்ள அமித் ஷா காந்திநகர் தொகுதியில் 2.99 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், 2.31 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அமித் ஷா முன்னிலை பெற்றுள்ளார்.
அதேசமயம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சோனல் படேல் 68 ஆயிரம் வாக்குகள் பெற்று பின்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.