சந்திரபாபு நாயுடுவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!
ஆந்திரத்தில் ஆட்சியைப் பிடித்த சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கவுள்ள தெலுங்கு தேசக் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலுங்கு தேசக் கட்சிக்கும் வாழ்த்துகள். உங்கள் ஆட்சி ஆந்திரத்திற்கு செழிப்பையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.