எடப்பாடி பழனிசாமிக்கு இனியும் தோல்விதான்: முதல்வர் ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமிக்கு இனியும் தோல்விதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு இனியும் தோல்விதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், விருதுநகரில் விஸ்வரூபம் காட்டிய இளைஞரணி!
#UnionBudget2026-இல் தமிழ்நாட்டுக்கு '0' என்றவர்களுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் நாமும் அதையே திருப்பித் தருவோம்!
மக்கள் நலனை மறந்துவிட்டு, சுயநலனுக்காக 'musical chair' ஆடிக்கொண்டிருக்கும் NDA பழனிசாமிக்கு இனியும் தோல்விதான்!
நம் #DravidianModel அரசின் 5 ஆண்டு சாதனைகளை வாளாகச் சுழற்றி, கொள்கையைக் கேடயமாக ஏந்தி #களம்2026-இல் #வெல்வோம்_ஒன்றாக!
கட்சி இதுவரை பெறாத பெருவெற்றியை என்னரும் இளைஞரணிப் படையே... பெற்றுத் தா! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக விருதுநகரில் திமுக இளைஞரணியின் தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் வளர்ந்த தமிழ்நாட்டை, மேலும் சிறந்த தமிழ்நாடாக உயர்த்துவோம். முன்னேறிய தமிழ்நாட்டை இன்னும் முற்போக்கான தமிழ்நாடாக உயர்த்துவோம்.
அதற்கு இளைஞரணியினர் உங்களுடைய முழு உழைப்பைக் கொடுக்க வேண்டும். உங்கள் உழைப்பிற்கான உயர்வு நிச்சயம் உங்களைத் தேடி வரும்!
உழையுங்கள்! அதுவும், உங்கள் தனித்தன்மை அனைவருக்கும் தெரிவது போன்று உழையுங்கள்! உங்கள் உழைப்பால் கழகத்தையும், மாநிலத்தையும் உயர்த்துங்கள்! அடுத்து வெற்றி மாநாட்டில் மீண்டும் சந்திப்போம்!
தமிழ்நாடா – N.D.A.-வா என்ற ஜனநாயகப் போரில் நாம் வெல்வோம் ஒன்றாக! இவ்வாறு கூறினார்.