முகப்பு
தமிழ்நாடு

பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

நிதீஷ்குமாருக்கு நடந்ததுதான் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும் -மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆரூடம்

Updated On : 7 மார்ச் 2026, 7:34 pm IST
மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் - @arivalayam
பகிர்:

பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசினார்.

பிகாா் முதல்வா் நிதீஷ்குமாா் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடுகிறாா். இதன்மூலம் அவா் முதல்வா் பதவியில் இருந்து விலகுகிறார்.

இந்நிலையில், பிகாா் முதல்வா் பதவியிலிருந்து விலகி மாநிலங்களவைத் தோ்தலில் களமிறங்கும் தனது முடிவுக்கு காரணம் என்ன? என்பதற்கான விளக்கத்தையும் நிதீஷ்குமாா் அளித்துள்ளாா்.இதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், நிதீஷ்குமாருக்கு நடந்தது எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! என்று ஆரூடம் கணித்துள்ளார்.

Advertisement

Advertisement

மதுரையில் இன்று (மார்ச் 7) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய மு. க. ஸ்டாலின், “மகாராஷ்டிரத்தில் சிவ சேனைக்கு, பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்ததுதான் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் நடக்கும்.

அதிமுகவை அடமானம் வைத்துள்ள இபிஎஸ், பாஜக தனக்கு நல்லது செய்யும் என நினைக்கிறார். உண்மையில், அதிமுகவின் ரத்தத்தைத்தான் பாஜக உறிஞ்சப் போகிறது.

எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாக வேறொருவரை அதிமுக பொதுச்செயலராக பாஜக ஏற்கெனவே தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. தேர்தலுக்குப்பின், அவரை மாற்றிவிடுவார்கள். பாஜகவுடன் கூட்டணி வைக்க மறுத்திருந்தால், முன்பே அவரை மாற்றியிருப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, இதே நிகழ்ச்சியில் மேடையேறிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “எம்ஜிஆர் ஆரம்பித்த, ஜெயலலிதா வளர்த்த அதிமுக இன்று இல்லை. அண்ணாவின் திமுகவாக இப்போது இல்லை. இது தற்போது அபகரிப்புத் திமுகவாக மாறிவிட்டது. இனிமேலும் அதில் பயணிப்பது தன்மானத்துக்கு எதிரானது என்பதை உணர்ந்துதான், 75 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட சித்தாந்தத்தை காத்து வரும் திமுகவில் ஒரு தொண்டனாகத்தான் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். தாய் கழகத்தில் இணைந்ததை பெரு மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்” என்றார்.

summary

What happened to Nitish Kumar will happen to Edappadi Palaniswami too! - Chief Minister M. K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments