தமிழகத்தில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்த ஜன நாயகன்!
ஜன நாயகன் திரைப்படத்தின் வசூல் குறித்து...
முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவான ஜன நாயகன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 23) உலகெங்கும் 3000-க்கும் அதிகமான திரைகளில் வெளியானது.
ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி இருந்தாலும் முதல் நாளில் தமிழகத்தில் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகத் திரையிடப்பட்டன. இதனால், இப்படம் நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி முதல் நாள் வசூலை (ரூ. 152 கோடி) முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
Advertisement
Advertisement
ஆனால், கூலியின் முதல் நாள் வசூலை ஜன நாயகன் முறியடிக்கவில்லை. ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படம் என்பதால் குழந்தைகள் கூட்டம் வராததும் வணிக தொய்வுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 250 கோடிக்கும் அதிகமாகவும் தமிழகத்தில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான திரையரங்குகளில் இந்த வார இறுதிவரை திரையிடப்படும் என்பதால் கூடுதல் வசூலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Vijay's film Jana nayagan has grossed over ₹250 crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.