மணிப்பூரில் காங்கிரஸ் முன்னிலை!
மணிப்பூரில் ஆளும் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது.
மக்களவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தீவிரமடைந்து வருகிறது. இந்தியளவில் இந்திய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருந்தாலும் இந்தியா கூட்டணியும் பல இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதனால், வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியாத சூழலே நிலவுகிறது.
இந்த நிலையில், மணிப்பூரில் ஆளும் பாஜக கட்சி அங்குள்ள 2 மக்களவைத் தொகுதிகளிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இரு தொகுதிகளில் ஒன்றில் காங்கிரஸும் மற்றொன்றில் நாகா மக்கள் முன்னணி கட்சியும் முன்னிலை வகிக்கிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.