தேர்தல் செய்திகள்

சென்செக்ஸ் 3500 புள்ளிகள் வீழ்ச்சி! பங்குகளை வாங்கிக் குவிக்கும் முதலீட்டாளர்கள்!

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டியின் மதிப்புகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

DIN

மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில், முடிவுகள் குறித்து நிலையான ஊகத்திற்கு வர முடியாததால், தேசிய பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

இறக்கத்துடன் துவங்கிய இன்றைய பங்குச்சந்தை தற்போது சென்செக்ஸில் 3485 புள்ளிகளை இழந்து 72275.46- இறக்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல், நிஃப்டி 1016.32 புள்ளிகளை இழந்து 22133.12-ல் தடுமாறி வருகிறது. (11.30) நிலவரப்படி)

இதனால், பல நிறுவனப் பங்குகளில் விலையும் வீழ்ச்சியடைந்து வருவதால் பல முதலீட்டாளர்கள் குறைவான விலைக்கு பங்குகளை வாங்கிக் குவிக்கின்றனர்.

மேலும், இன்றைய பங்குச்சந்தை முடிவில் 4000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்!

கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணையும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

கமிந்து மெண்டிஸ் அதிரடி; டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை!

க்யூட்டான வெண்ணிலவே... நிமிஷா சஜயன்!

SCROLL FOR NEXT