கோப்புப் படம் 
தேர்தல் செய்திகள்

அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

அண்ணாமலை - டிடிவி தினகரன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Manivannan.S

பாரதிய ஜனதா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று (மார்ச் 20) கையெழுத்தானது. இதில் அமமுகவுக்கு 2 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுகவுக்கு இரண்டு மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த 2 தொகுதிகள் எவை என்பதை பாஜக தலைமைதான் அறிவிக்கும்.

எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என கட்சியினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். நாங்கள் கேட்ட தொகுதிகள் எங்களுக்குக் கிடைத்துள்ளது.

டெல்டா பகுதிகளில் போட்டியிடவே எங்களுக்கு விருப்பம். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவே எங்கள் கட்சியினர் விரும்புகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT