முகப்பு
தமிழ்நாடு

ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைப்பு!

ஆதவ் அர்ஜுனா வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது பற்றி...

Updated On : 7 ஏப்ரல் 2026, 11:40 am IST
ஆதவ் அர்ஜுனா - dps
பகிர்:

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கியது. நேற்றுடன்(ஏப். 6) வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், மொத்தம் 7,000-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இன்று காலை முதல் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக தேர்தல் பிரசாரப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று பிற்பகலில் வேட்புமனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது முடிவு செய்து அறிவிக்கப்படும்.

இதனிடையே, கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின், சேப்பாக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பெரம்பூரில்ல் தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கத்தில் உதயநிதி வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு அதிமுகவும், பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு திமுகவும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

summary

Adhav Arjuna's Nomination holds by Election Officers!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.