முகப்பு
தமிழ்நாடு

திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!

திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் பற்றி...

Updated On : 8 ஏப்ரல் 2026, 11:34 am IST
திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் - x / mkstalin
பகிர்:

திருவண்ணாமலையில் சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காலை நடந்துசென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பல்வேறு மாவட்டங்களில் தீவிரப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

Advertisement

Advertisement

- x / mkstalin

இதற்காக திருவண்ணாமலை பயணம் மேற்கொண்டிருக்கும் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து இன்று காலை மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் மக்களை சந்தித்து திமுக வேட்பாளரும் அமைச்சருமான எ.வ.வேலுவுக்கு வாக்கு சேகரித்தார். உடன் கீழ்பென்னத்தூர் திமுக வேட்பாளர் கு. பிச்சாண்டி உள்ளிட்ட நிர்வாகிகளும் இருந்தனர்.

- x / mkstalin

மேலும் பிரசாரத்தின்போது, குழந்தைகள் உள்ளிட்டோருடன் சுயப்படம் எடுத்துக் கொண்டார்.

summary

Chief Minister Stalin Campaigns in Tiruvannamalai!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.