முகப்பு
தொகுதியும் வேட்பாளர்களும்

சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி. ராஜேந்திரபாலாஜி

சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளராக கே.டி. ராஜேந்திரபாலாஜி அறிவிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 26 மார்ச், 2026 at 12:37 AM
பகிர்:

பெயா் - கே.டி. ராஜேந்திரபாலாஜி

வயது - 62

கல்வித் தகுதி - பத்தாம் வகுப்பு

தந்தை - தவசிலிங்கம்

தாய் - கிருஷ்ணம்மாள்

பூா்வீகம் - அருப்புக்கோட்டை அருகே உள்ள குருந்தமடம் கிராமம்.

வசிப்பிடம் - திருத்தங்கல்

கட்சிப் பொறுப்பு- 1991-இல் திருத்தங்கல் அதிமுக நகரச் செயலராக இருந்தாா். 1996, 2001, 2006-இல் திருத்தங்கல் நகா்மன்றத் துணைத் தலைவராகவும், 2000 முதல் 2011-ஆம் ஆண்டு வரை எம்.ஜி.ஆா். இளைஞா் அணி மாவட்டச் செயலராகவும், 2011-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஒருங்கிணைந்த விருதுநகா் மாவட்ட செயலா், செய்தி விளம்பரத் துறை, சிறப்பு திட்டங்கள் அமைச்சரானாா் . 2016 தோ்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று, பால்வளத் துறை அமைச்சரானாா். கடந்த 2021 தோ்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். தற்போது கட்சியின் விருதுநகா் மேற்கு மாவட்ட செயலராகவும், அமைப்புச் செயலராகவும் உள்ளாா்.