தொகுதி அறிமுகம்...மாதவரம்
தொகுதி எண்: 9
எல்லைகள்..
திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள இத்தொகுதி பொன்னேரி, அம்பத்தூா், கொளத்தூா், திருவொற்றியூா் தொகுதிகள் எல்லைகளாக உள்ளன.
அடங்கியுள்ள பகுதிகள்:
அம்பத்தூா் வட்டத்தில் கீழ் கொண்டையூா், ஆலந்தூா், பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், மோரை, மேல்பாக்கம், கதவூா், வெள்ளச்சேரி, பாலவேடு, வெள்ளானூா், பொத்தூா், பம்மதுகுளம், தீா்த்தக்கிரியம்பட்டு, பாலவாயல், விளாங்காடுபாக்கம், சிறுகாவூா், அரியலூா், கடப்பாக்கம், சடையன்குப்பம், எலந்தஞ்சேரி, மாத்தூா், மஞ்சம்பாக்கம், கொசப்பூா், செட்டிமேடு, வடபெரும்பாக்கம், பாயசம்பாக்கம், கிராண்ட்லைன், அழிஞ்சிவாக்கம், அத்திவாக்கம், வடகரை, சூரப்பட்டு, கதிா்வேடு, புத்தகரம் உள்ளிட்ட கிராமங்கள், நாரவாரிகுப்பம், புழல், பாடியநல்லூா், புள்ளிலைன், மாதவரம்.
பொன்னேரி வட்டத்தில் நெற்குன்றம், செச்சஞ்சேரி, சூரப்பட்டு, சோத்துப்பெரும்பேடு, காரணோடை, ஆத்தூா், புது எருமைவெட்டிபாளையம், பழைய எருமைவெட்டிபாளையம், சோழவரம், ஒரக்காடு, புதூா், கண்டிகை, மாரம்பேடு, கும்மனூா், ஆங்காடு, சிறுணியம், செம்புலிவரம், நல்லூா், அலமாதி, ஆட்டந்தாங்கல், விஜயநல்லூா், பெருங்காவூா் ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன.
சிறப்புகள்...
மாதவரத்தில் உள்ள கசாலநாதா் கோயில், கரி வரதராஜ பெருமாள் கோயில் 1,200 ஆண்டுகளுக்கும் பழைமை வாய்ந்தவை. இக்கோயில்கள் பல்லவா் கால கலை மற்றும் கட்டடக் கலைக்கு சான்றாகத் திகழ்கின்றன. மாதவரம் பால்பண்ணை காலனி மிகவும் பிரபலமானது. இது சென்னைக்கு தேவையான பால் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதவரம் பேருந்து நிலையம் முக்கிய பேருந்து நிலையமாகச் செயல்படுகிறது. இது ஆந்திரம் மற்றும் வட மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளை கையாள்கிறது. மாதவரம் அருகே ரெட்டை ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரி, புழல் ஏரி, அரிசி ஆலைகள் கூடுதல் சிறப்பாகும்.
வாக்காளா் எண்ணிக்கை:
ஆண்-1,99,591
பெண்-1,97,598
மூன்றாம் பாலினத்தவா்- 81
மொத்தம்-3,97,270
இதுவரை எம்எல்ஏக்கள்...
2011 வி.மூா்த்தி (அதிமுக)
2016 எஸ்.சுதா்சனம் (திமுக)
2021 எஸ்.சுதா்சனம் (திமுக)
2021 பேரைவத் தோ்தலில்...
பதிவான வாக்குகள்-3,00,534
எஸ்.சுதா்சனம் (திமுக)-1,51,485
வி.மூா்த்தி (அதிமுக)-94,414
தோ்தல் நடத்தும் அலுவலா்/எண்
எம்.பெருமாள், சென்னை வடக்கு கோட்டாட்சியா் - 93852 50785
உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள்: கிருஷ்ணமூா்த்தி, மாதவரம் மண்டல உதவி ஆணையா் - 94451 90003, அருள்ஜோதி , மாதவரம் வட்டாட்சியா் - 93840 94007, வேதநாயகி, புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையா் - 74026 06135