அஞ்சல் முறையில் வாக்களிப்பது எப்படி? விளக்கும் விடியோ 
தெரிந்துகொள்ள

அஞ்சல் முறையில் வாக்களிப்பது எப்படி? விளக்கும் விடியோ

தேர்தல் சட்டத்தின்படி, தேர்தலில் வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும், தங்களுக்கென ஏற்படுத்தப்பட்ட வாக்குச் சாவடிக்கு நேரில் வந்தோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வாக்களிக்கலாம்.

DIN

தேர்தல் சட்டத்தின்படி, தேர்தலில் வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும், தங்களுக்கென ஏற்படுத்தப்பட்ட வாக்குச் சாவடிக்கு நேரில் வந்தோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வாக்களிக்கலாம்.

அந்த வகையில், கீழ்க்காணும் பிரிவுகளில் ஒரு வாக்காளர் தனது வாக்கினை அஞ்சல் முறையில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழிவகை செய்கிறது.

அதன்படி. 
1.  ராணுவப் பணியில் உள்ள வாக்காளர்கள், பிரதிநிதி மூலமாக வாக்களிக்க விரும்புவோர்.

2. சிறப்பு வாக்காளர்கள்.

3. மேற்காணும் இரண்டு பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் மனைவியர்.

4. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வாக்காளர்கள்.

5. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்.

6. பிரகடனப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் ஆகியோர் அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம்.

இவர்கள் தவிர்த்து, அஞ்சல் மூலம் வாக்களிப்போர் பட்டியலில் மேலும் ஒரு சில பிரிவினர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் திருத்தப்பட்ட முடிவின்படி,
1. மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேற்பட்டோர்)
2. மாற்றுத் திறனாளிகள்.
3. அறிவிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்தப்படும் வாக்காளர்கள்.
4. கரோனா பாதிக்கப்பட்ட நபர்கள், பாதிப்புள்ளதாகக் கருதப்படுவோர் ஆகியோர் அஞ்சல் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் பல்வேறு படைகளில் பணியாற்றுவோரும், அவர்களது மனைவிகளும் அஞ்சல் முறையில் வாக்களிப்பது எவ்வாறு என்பது குறித்து விளக்கும் விடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த விடியோவின்படி, அஞ்சல் முறையில் வாக்களிப்போர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை நன்கு தெரிந்து கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT