வேலைவாய்ப்பு

சார்ஜாவில் கிளார்க், ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சார்ஜாவில் கிளார்க், தட்டச்சர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

சார்ஜாவில் கிளார்க், தட்டச்சர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான சார்ஜாவுக்கு 30 முதல் 35 வயதுக்குட்பட்ட, ஐக்கிய அரசு குடியரசு ஓட்டுநர் உரிமம் எண்- 3 வைத்துள்ள, 2 இலகு ரக வாகன ஓட்டுநர்கள், உரிமம் எண்- 3 மற்றும் 6 வைத்துள்ள ஒரு பேருந்து ஓட்டுநர், உரிமம் எண்-7 மற்றும் 8 வைத்துள்ள 2 போர்க்லிப்ட் மற்றும் ஜேவிசி ஓட்டுநர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர்.

மேலும், 21 முதல் 35 வயதுக்குள், பி.காம் தேர்ச்சி பெற்று கணக்கு பிரிவில் 8 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் 2 கிளார்க் மற்றும் தட்டச்சர்கள் பணிக்கு தேவைப்படுகின்றனர்.

இப்பணியிடங்களுக்கான தகுதி , அனுபவம், உள்ளிட்ட விவரங்களை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

உரிய தகுதி இருப்பவர்கள், தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் நகல்கள், புகைப்படத்துடன், ‘ ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், எண்.42, ஆலந்தூர் சாலை, கிண்டி தொழிற்பேட்டை, சென்னை- 600032’ என்ற முகவரியில் அமைந்துள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு omcresum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044- 22502267, 22505886,08220634389 என்ற தொலைபேசி மற்றும் செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT