வேலைவாய்ப்பு

எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

ஒவ்வோரு ஆண்டும் தமிழகத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். தற்போது

ஆர். வெங்கடேசன்

ஒவ்வோரு ஆண்டும் தமிழகத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். தற்போது முதல் முறையாக குரூப்-பி, குரூப்-சி பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டிருப்பதால் தமிழக மாணவர்கள் எளிதாக மத்திய அரசுப் பணியில் சேருவதற்கு ஓர் அரிய வாய்ப்பாக எஸ்எஸ்சி தேர்வுக்கான அறிவிப்பை வெளிவந்துள்ளது. இந்த தேர்வின் மூலம் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் விரைந்து விண்ணப்பித்து வெற்றிக்காண பயணத்துக்கு தயாராகுங்கள். விண்ணப்பிக்க இன்றே கடைசி தினமாகும்.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள சார்நிலைப் பணிகளான (குரூப்-பி, குரூப்-சி) காலி பணியிடங்களை பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission-SSC) மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (Combined Graduate Level Examination) நடத்தப்படுகிறது. இந்த தேர்வு முதல்நிலை, இரண்டாம் நிலை என இரு நிலைகளில் நடைபெறுகிறது.

முதல் நிலை தேர்வு: பொது அறிவு, ரீசனிங், அடிப்படை கணிதம், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் அமைந்திருக்கும்.

இரண்டாம் நிலை தேர்வு: கணிதம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து கேள்விகள் அமைந்திருக்கும்.

நேர்முகத் தேர்வு: குரூப்-பி, குரூப்-சி பணிகளுக்கான நேர்முகத்தேர்வு ரத்துசெய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதால் இந்த ஆண்டிலிருந்து நேர்முகத்தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் மத்திய அரசு பணி உறுதி.

தகுதி: ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வெழுத ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பணிகளுக்கு ஏற்ப வயதுவரம்பில் மாற்றம் காணப்படும். அதிகபட்சம் 27, 30, 32க்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

பணி: பல்வேறு துறைகளில் உதவியாளர், உதவி பிரிவு அதிகாரி (ஏஎஸ்ஓ), வருமான வரி ஆய்வாளர், மத்திய கலால் ஆய்வாளர், தடுப்பு ஆய்வாளர், தேர்வு ஆய்வாளர், உதவி அமலாக்க அதிகாரி, சிபிஐ சப்-இன்ஸ்பெக்டர், தபால்துறை ஆய்வாளர், கணக்கர், புள்ளியியல் ஆய்வாளர், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர், தேசிய புலனாய்வு முகமை உதவி ஆய்வாளர், உதவி தணிக்கை அதிகாரி மற்றும் குரூப்-சி நிலையில் ஆடிட்டர், கணக்கர், முதுநிலை உதவியாளர், வரி உதவியாளர், போதைப்போருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் என பல்வேறு விதமான பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்: அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இந்த தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: மே மாதம் 8 - 22 -ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://sscregistration.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்தற்கான கடைசி தேதி: 10.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT