வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா...  5134 பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்க இன்றே கடைசி!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 2016-ஆம் ஆண்டிற்கான 5132 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் கிளார்க் (கிரேடு- சி)

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 2016-ஆம் ஆண்டிற்கான 5132 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் கிளார்க் (கிரேடு- சி) பணியிடங்களுக்கான அறிப்பை ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்எஸ்சி) கடந்த மாதம் அறிவித்திருந்தது. இதற்கு +2 முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு இன்றறே கடைசி தினமாகும்.
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பதவி: Postal Assistant/Sorting Assistant - 3281
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
பதவி: Data Entry Operator - 1321
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பதவி: Lower Division Clerk - 506
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
பதவி: Court Clerk - 26
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900

வயது வரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்

தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மேல்நிலைக் கல்வி (+2) அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  சில பணிகளுக்கு ஹிந்தி அல்லது ஆங்கில மொழிகளில் தட்டச்சுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள், விதைவகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை கணினிப்பிரதி எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2016
தேர்வு நடைபெறும் தேதி: 07.01.2017, 05.02.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/CHSLE_2016_Notice_english.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

SCROLL FOR NEXT