வேலைவாய்ப்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க செப்.14 வரை நீட்டிப்பு

குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 451 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்

VASUDEVAN.K

சென்னை: குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 451 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று வியாழக்கிழமை (செப்.8) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்  செப்.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு கட்டணம் செலுத்த செப்.16-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் 5 ஆயிரத்து 451 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) கடந்த மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது. கடந்த ஒரு மாதமாக இணைய வழியாக (www.tnpsc.gov.in) தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர். எழுத்துத் தேர்வானது நவம்பர் 6 ஆம் தேதியன்று காலை 10 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT