வேலைவாய்ப்பு

குரூப் 2-ஏ தேர்வுக்கு வழிகாட்டும் இலவச கருத்தரங்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ தேர்வுக்கு தயாராகி வரும் போட்டித் தேர்வர்களுக்கு வழிகாட்டும் இலவச கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

தினமணி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ தேர்வுக்கு தயாராகி வரும் போட்டித் தேர்வர்களுக்கு வழிகாட்டும் இலவச கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கம், வரும் மே 20 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு பாரிமுனையில் உள்ள இந்திய இளைஞர் சங்க கட்டடத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கருத்தரங்கில், குரூப் 2-ஏ தேர்வு மற்றும் டிஆர்பி தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்படவுள்ளன.

மேலும், தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்களுக்கு மாதிரித் தேர்வின் முக்கியத்துவம், முழு மதிப்பெண்கள் பெறுவது, குறுகிய காலத்தில் பாடங்களைப் படிக்கும் உத்திகள் உள்ளிட்டவை கற்றுத்தரப்பட உள்ளன.

இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள கட்டணம் எதுவுமில்லை.
கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் குரூப் 2-ஏ தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இலவசமாக வழங்கப்படும்.

கலந்துகொள்ள விரும்புவோர், 73387 14292 மற்றும் 99419 37976 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT