சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள், பதிவாளர்கள் மற்றும் துணை பதிவாளர்களின் நேர்முக உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்ப்படவுதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 82
பணி மற்றும் காலியிடங்கள் விரம்:
பணி: Personal Assistant to the Hon’ble Judges
காலியிடங்கள்: 71
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500 + சிறப்பு சம்பளம்.
தகுதி: கலை, அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன், ஆங்கில சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் உயர்நிலை, முதுநிலை தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேசன் பிரிவில் சான்றிதழ் பெற்று இருப்பது அவசியம்.
பணி: Personal Assistant (to the Registrars)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,15,700
பணி: Personal Clerk (to the Deputy Registrars)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன், தட்டச்சு, சுருக்கெழுத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் உயர்நிலை, முதுநிலை தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேசன் பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். SC, SCA, ST, MBC&DC, BC, BCM பிரிவு விண்ணப்பதாரர்கள் 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி. மற்றும் டி.சி. பிரிவு விண்ணப்பதாரகள் ஒவ்வாரு பணிக்கும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.(ஏ) பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை சென்னையில் மாற்றத் தக்க வகையில் Registrar General, High Court of Madras என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவு தபால் மூலம் Registrar General, High Court, Madras 600-104 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.05.2018
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.hcmadras.tn.nic.in/Notf56of2018.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.