வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கு 42 ஆயிரம் சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

ஆர். வெங்கடேசன்


சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 417 தரத்திலான 145 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆகஸ்ட் 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 417

பணி: Probationary Officer (PO)
(எஸ்சி - 62, எஸ்டி - 31, ஓபிசி - 112, பொதுப்பிரிவினர் - 212)

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது இணையான தகுதிகள் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்கும். அரசுவிதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும். 

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2018

ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 06.10.2018

ஆன்லைன் முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 04.11.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT