வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு வெள்ளி: சென்னையில் 24-ல் வேலைவாய்ப்பு முகாம்

தினமணி


தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ‘வேலைவாய்ப்பு வெள்ளி’ ஆக அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று தரப்படுகின்றன.

இதன்மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெறுகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இணைந்து வருகிற 24-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் 35 வயதுக்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். 

முகாமில் 20–க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 700-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT