வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு அழைப்பு: தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 1896 வேலை

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 1896 எக்சிகியூட்டிவ் மற்றும் நான் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 1896 எக்சிகியூட்டிவ் மற்றும் நான் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் காலியிடங்கள்: 1,896

பணி: இளநிலை பொறியாளர்
பணி: பராமரிப்பாளர் 
பணி: அசிஸ்டன்ட் மேனேஜர்
பணி: ஆபீஸ் அசிஸ்டன்ட்
பணி: லீகல் அசிஸ்டன்ட்  
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு: 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும். பணிகளுக்கான சரியான வயது வரம்பை அறிய இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் பி.இ., பி.டெக். பட்டப்படிப்புடன், கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற என்ஜினீயரிங் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்ள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.delhimetrorail.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்

செய்யாற்றில் பள்ளி மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள்

சுகாதார ஆய்வாளா் தோ்வை ரத்து செய்யக் கோரி மனு: சிபிசிஐடி விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துகள் பாதுகாப்பில் அறநிலையத் துறை அதிகாரிகள் துரோகம்

சுற்றுலாப் படகுகளில் கடலோர காவல் படையினா் திடீா் ஆய்வு

SCROLL FOR NEXT